Sunday, April 22, 2018

Mind voice என்று நினைத்து சத்தமாக பேசிட்டேன்


வாய்ப்பு கிடைத்தால் வாழ்கையில் முன்னேறலாம் [எது முன்னேறம் என்பது வேற கேள்வி]. சிலர் வாய்ப்பை உண்டாக்கின்றார்கள். சிலருக்கு வாய்ப்பு fridgeல் உள்ள chill beer போல தானாக வரும். 

படங்களில் பார்த்திருப்பீர்கள்- ஹீரோ interviewவில் மளமளவென்று எல்லா கேள்விகளுக்கும் பதில் செல்வார். கேள்வி கேட்பவர் முகத்தில் ஆச்சர்யம். “You are appointed” என்று சொல்வதுதான் பாக்கி. அப்போது அவருக்கு ஒரு போன் வரும். பேசி முடித்தவர் முகத்தில் ஒரு sad emojiயை வைத்துக்கொண்டு ஹீரோவை பார்ப்பார். நம்ம ஹீரோவுக்கு subject over என்று புரிந்துவிடும். 

மேலே சொன்ன scene சினிமாவுக்காக எழுதப்பட்ட ஒரு கற்பனை என்றாலும் நாம் வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு சிலர் இப்படி பெரிய சிபாரிசு மூலமாக வேலையில் சேர்வதுண்டு. 

எந்தவித தகுதியும் திறமையும் இல்லாமல், Project Managerன் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் அலுவலகத்திற்குள் நுழைவதுண்டு. இப்படி நடப்பது ITல் அரிது என்றாலும் அங்கோன்றும் இங்கோன்றுமாக நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. 

நான் வேலை செய்த ஒரு IT நிறுவனத்தில், 45 வயதுள்ள ஒருவர் join செய்தார். பெயர்- கோவிந்தன் (மாற்றப்பட்டுள்ளது). அவர் join செய்த post- Group Manager. அவருக்கு 4-5 Team leaders report பண்ணுவார்கள். கோவிந்தனுக்கு இந்த துறையில் எந்த அனுபவமும் இல்லை. Program Directorன் சொந்தம் என்ற ஒரே தகுதியில் அவர் வேலைக்கு சேர்க்கப்பட்டார். இதில் irony என்னவென்றால் அவருக்கு Outlookல் mail அனுப்பகூட தெரியாது! மிகமிக சுமாரான ஆங்கிலம்தான் வரும். தமிழ் தெரியாது. தெலுங்கு & ஹிந்திதான் வரும். எதையும் புரிந்து கொள் முயற்சிக்கமாட்டார். தான் பிடித்த ஈமூ கோழிக்கு மூணு கால் என்ற நிலையில்தான் இருப்பார். இவர் யார் என்று தெரிந்துகொண்ட சில அல்லக்கைகள் அவரையே சுற்றி வருவார்கள். அவரின் வேலையை இவர்களே செய்வார்கள். அப்புறம் என்ன மஜாதான். 

படித்து, arrears வைத்து, பட்டம் பெற்று, கஷ்டப்பட்டு, office politics எதுவும் செய்யாமல். உழைப்பே உயர்வு என்று வாழ்ந்துக்கொண்டு வாய்ப்புக்காக traffic jamல் பலர் காத்திருக்க இப்படி சிலர் helicopterல் சென்று இறங்கிவிடுகின்றனர். 

சரி இப்போ எதுக்கு இந்த புலம்பல் என்று நினைக்கின்றீர்களா? இப்போ தகுதி இல்லாதவர்கள் தானே தலைவர்/வி-யாக இருக்கின்றார்கள்.


No comments:

Post a Comment