Tuesday, July 19, 2016

எங்கும் நடக்கலாம்


**இந்தியாவின் ஒரு பெருநகரத்தில்**

வைத்த கண் வாங்காமல் தனது laptopன் வலதுப்பக்க மூலையில் இருக்கும் chat windowவை பார்த்துக்கொண்டிருந்தாள் ப்ரியா.

இப்படியே Sunday eveningக ஓட்டிருவோமா ?” என்று சொல்லிக்கொண்டு அறையினுள் வந்தான் ரகு.

ப்ரியா அவனுக்கு பதில் சொல்லாமல் laptop screenனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

யாரு.. உங்க பாஸ்ஸா?

ம்ம்

காலையில் இருந்து நாலு தடவை பேசியாச்சி திருப்பவும் என்ன ?”.

வேற என்ன complaint raise பண்ணவேணாமுன்னு சொல்றாரு..

சரின்னு சொல்லிட்டு offlineல வா. நமக்கு இருக்குறது ஒரு நாள்தான் free. இதுல இந்த tension தேவையா! வீட்டுக்கு things வாங்கணுன்னு சொன்னயில்ல. வா உன் favorite LB storesகு போவோம்..

நீங்க garageல் இருந்து காரை எடுங்க நான் two minutesல வரேன்

***

**இந்தியாவின் ஒரு சிறுநகரத்தில்**

ண்ண திறந்ததும் இருட்டா இருந்திச்சி. எங்க இருக்கோமுன்னு தெரியல. எங்கயோ படுத்துட்டு இருக்கோமுன்னு தோணிச்சி. ஆனா எந்த எடமுன்னு தெரியல.. எழக்கூட முடியல.

அம்மா.. மா..”ன்னு கத்தினேன். பதில் வரல. தீடிர்னு ஒரு கை என் வாய முடிச்சி. என்னால கத்தமுடியல. யாரோ என் மேல படுத்த மாதிரி அழுத்தினாங்க. படுத்த உருவத்தில் இருந்து வேர்வை கலந்த பாண்ட்ஸ் பவுடர் வாசம் வந்திச்சி. எனக்கு மயக்கமா வந்துச்சி. கொஞ்ச நேரம் கிழிச்சி அந்த உருவம் அற கதவை திறந்துச்சி.

மச்சு வீட்டு ஐயா!. 

ஐயா”னு கத்தினேன். அவரு என்ன திருப்பி பார்த்துட்டு போயிட்டாரு.




இதுதான்மா நடந்துன்னு நான் கூறி முடிக்கையில் அம்மா தலையில் அடித்துக்கொண்டாள்.

எழவு எடுத்தவளே. நீ எதுக்குடி அந்த வுட்டுக்கு போன

மாலதி கிட்ட வீட்டு பாடம் வாங்க

போதும் நீ படிச்சி கிழிச்சது. இனிமேல் அவங்க வுட்டுக்கு போன கால ஒடிச்சிடுவேன்

ஏன்மா..

அம்மா கையில் இருந்த காபி டம்ளரை என் மேல் வீசி எறிந்தாள். அவள் கோவப்படுபவள் அல்ல. எனக்கு புரியவில்லை. கொஞ்ச நாள் கழித்து எனக்கு ஜொரம் வந்தது.

***

நேரிசல் இல்லாத அந்த ஞாயிறுகிழமை சாலையில் வண்டியை உருட்டிக்கொண்டிருந்தான் ரகு. ப்ரியா ஏதோ யோசனையில் இருந்தாள். வண்டி 90 நோடிகள் ட்ராஃபிக் சிக்னலில் நின்றது.

மறுபடியும் என்ன யோசனை”.

ம்ம் வேற என்ன..

அதுதான் complaint பண்ணலேன்னு சொல்லிட்டியே

இது மூணாவது தடவ ரகு!!

அவ்வளவு பெரிய position இருக்கிறவன் தப்பு பண்ணுறதுக்கு முன்னால யோசிக்கணும்

நாளைக்கு ஒரு வேள எனக்கு நடந்தால்?

ரகு மவுனத்தை பதிலாகத்தந்தான். ப்ரியா தொடர்ந்தாள், “CTOவாச்சே.. வேளியில தெரிஞ்சா company மானம் போகும்!!”.

அதுக்குதான் உன் பாஸ் அவனை statesக்கு அனுப்பபோறாங்களே”.

அங்க போய் இவன் சும்மாவா இருப்பான. சிலுமிஷம் பண்ணா இண்டர்நேஷ்னல் issue ஆயிடும்”.

அந்த பொண்னு பூஜா?

அவ பயந்து வேலைய விடுற stageல இருக்கா. ஆனா ஒரு மெயில் Employee Voice DLக்கு போட்டா போதும் எல்லாம் over..

உன்னோட team நீதான் decide பண்ணணும்” என்றான் ரகு.

கார் LB stores முன்னால் நின்றது.
***

வாங்க சார்”.

தேவி மூணு நாளா ஸ்கூலுக்கு வரல.. உடம்பு செரியில்லேன்னு மாலதி சொன்னா..

ஆமா ஜொரம்.. உட்காருங்க..

சார் குரல் கேட்டதும் நான் அறையில் இருந்து வெளியே வந்தேன். அம்மா சாருக்கும் தெரியாமல், எதுவும் சொல்லாதே என்பது போல் கையால் சைகைக் காட்டினாள்.

என்னாச்சு தேவி”னு சார் கேட்டதும் மளமளவேன்று என்னை அறியாமல் அன்று மச்சு வீட்டில் நடந்தது அத்தனையும் கூறிவிட்டேன்.

போலீஸ் கிட்ட..” என்றார் சார்.

அம்மா கையெடுத்து கும்மிட்டாள், “அவங்க பெரிய எடம், அதும் ஐயா மேல எப்படி சார்” என்றாள்.

சார் ஒண்ணும் சொல்லல, “உடம்ப பாத்துகோன்”னு என் கிட்ட சொல்லிட்டு போயிட்டார்.
***

திங்கட்கிழமை காலை என்ற பரபரப்பு எதுவும் இல்லாமல் ஆப்பிஸ் கொஞ்சம் மந்தமாக இருந்தது, ப்ரியா அதை உணர்ந்தாள். பூஜாவின் முகம் வழக்கத்தைவிட இரண்டு சுற்று மேக்கப் குறைவாக இருந்தது. மேலும் அவள் முகம் வெளிரி இருந்தது. அவளுடன் பேசலாம் என்று ப்ரியா எழுந்தபோது கிஷோர் (பாஸ்) தனது அறையில் இருந்து வந்தார்.

ப்ரியா எல்லாம் settled கணேஷ் யுஸ்க்கு பேக் பண்ணியாச்சு. அடுத்த மாசம் அவன் போயிடுவான்” என்றார் கிஷோர்.

அப்போ பூஜா ??

அவ…. அவங்கதான் resign பண்ணுறாங்களே” என்றார். அவர் மொபையில் போன் அலறியது.

I have to take this” என்று செல்லிட்டு அவருடைய அறைக்கு சென்றார்.




Laptopன் வலது ஓரத்தைப்பார்த்தாள் ப்ரியா. மனதிற்குள், ”ஹம்..பதினோன்னுதான் ஆவுது”. என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமான மனநிலையில் இருந்தாள். Hand bagல் இருந்த அவளது போன் அலறியது. எடுப்பதற்குள் கால் கட்டாகிவிட்டது. Bagல் நேற்று LB storesன் bill இருந்ததை கவனித்து அதை எடுத்துப்பார்த்தாள்.

***

ரண்டு நாள் கழித்து சார் வீட்டுல நான் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போது தெருவில் ஒரு சலசலப்பு. நாலு வீட்டு தள்ளியிருக்கும் மச்சு வீட்டுக்கு முன்னால போலீஸ் ஜீப் இருந்தது. அவங்க கூட சாரும் அம்மாவும் எதோ பேசிகிட்டு இருந்தனர். நான் ஓடி போய் அம்மாவ கட்டிபிடிசிக்கிட்டேன். ஐயா போலீஸ் கூட போயிட்டாரு. அவங்க அப்பத்தா என் அம்மாவ கெட்ட கெட்ட வார்தையா திட்டினாங்க. எங்க மேல மண்ண வாரிப் போட்டாங்க.

இதேல்லாம் நடந்து சில வாரம் கழித்து அம்மா ஒரு துணி மூட்டையுடன் என்ன சார் வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க.

சார் யாருக்கு தெரியாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். இப்போ தெனமும் எங்கள இந்த ஊரு ஏசுது” என்றாள் அம்மா.

கொஞ்ச நாளுள எல்லாம் சரி ஆயிடும்”.

அம்மா அழுதுக்கொண்டே “இல்ல சார் நாங்க இந்த ஊருல இருந்த எங்கள இவங்க கொன்றுவாங்க.. இல்ல தற்கொல பண்ண வெச்சிடுவாங்க… நாங்க ஊரவிட்டு போறோம்”.

***

பில்லின் மேல் Lakshmibai Stores என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கடையில் பெயர் கொட்டை எழுத்தில் இருந்தது. அதைப்படித்துவிட்டு ஒரு பொறி தட்டியதுப் போல் தனது மெயிலை open செய்தாள். அடுத்த அரைமணி நேரத்தில் கிட்டத்தட்ட நூறு வரிகளுடன் ஒரு மெயில் அவளின் sent itemsல் Employee Voice என்ற இமெயில் முகவரிக்கு சென்றிருந்தது.

அந்த மெயிலில் Devi Priya என்ற தனது முழுப்பெயர் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள்.

***

சார் யோசித்தார்.. “சரி, அப்போ பட்டணத்துல இருக்குற என் அக்கா வீட்டுக்கு போங்க. தேவி அங்கேயே படிக்கலாம். நான் நாளைக்கு போன்ல சொல்றேன். எதுக்கும் ஒரு கடிதாசி எழுதி தரேன் சரியா” என்றார். 

அம்மா தலை அசைத்தாள். 

லட்சுமிநாதன் என்று தனது பெயரை அச்சாக கையேழுதிட்டு ஒரு கடிததை அம்மாவிடம் கொடுத்தார்.

***

**Illustrations along with the story by the blogger.




6 comments:

  1. அருமையான கதை. முடிவு நிச்சயம் யாரையும் சிந்திக்க வைத்து அசர வைக்கும்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. wow!!! really brilliant story!

    ReplyDelete
  3. நல்லா இருந்துது நண்பரே!
    - கலகக்கண்மணி!

    ReplyDelete