Saturday, November 8, 2014

பாட்டி வடை சுட்ட கதை




பாட்டி வடை சுட்ட கதை. இந்த கதையை நம்ம தமிழ் cinema directors எடுத்தா எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை. ஒரு producer-ரிடம் அவர்களே கதையை சொல்வார்கள்.

----
முதலில் Selvaragavan- Sir opening-ல சோழர் காலத்த காட்டுறோம். ஒரு பாட்டி தென் கோடி தமிழகத்தில் வடை சுடுறங்க, அதே நேரத்துல Jupiter பக்கத்துல இருக்குற Kipiter planet-ல ஒரு தாத்தா வடை சுடுறாரு…

Producer- செல்லாது செல்லாது. அடுத்த ஆள் வாங்க !
----

Shankar- Sir.. வடை சின்னதாதான் இருக்கணுமா ? நம்ப பாட்டி 100-அடி size-ல வடைய சுடுறாங்க. அப்போ பேரிய size dinosaur robot வந்து தூக்கிட்டு போயிடுது.

Producer- வடைக்கு budget பத்தாது தம்பி. நீங்க வேணும்னா சொந்த காசு போட்டு சுட்டுகோங்க. அடுத்த ஆள் வாங்க !
----

Manirathanam room உள்ள வந்து உட்கார்ந்து, producer-ர கொஞ்ச நேரம் உத்து seeing..

Producer- (அப்புராணியா asking) கதை எப்போ sir சொல்லுவிங்க ?

Mani- பாட்டி…..(silence)…. வடை….(silence)…. காக்கா…..(silence)..

Producer- அய்யோ தூக்கம் வருது. அடுத்த ஆள் வாங்க !
----

Hari enters the room with his 10 assistants, all carrying அரிவாள்-s

Hari- பாட்டி சுட்ட வடைய காக்க துக்கிட்டு பறக்க, பாட்டி “எஎஎய்ய்ய்ய்ய்…”ன்னு ஒரு பேரிய sound விடுது. அத கேட்டு ஊர்ல இருக்குற எல்லா பாட்டிகளும் 10-15 Tata Sumo-ல காக்கவ துறத்துறாங்க.

Producer- தம்பி முடியல. அடுத்த ஆள் வாங்க !
----

Kamalhaasan- கதைக்கு போவதற்கு முன்னாடி, பாட்டிக்கு காக்கவுக்கு Hollywood-ல இருந்து வரும் Micheal Westmore 4-hours make-up போடுவாரு. OK-வா?

Producer- Not, OK. அடுத்த ஆள் வாங்க !
----

Goutham Vasudev Menon- (Only English) Before going into the story, let’s decide the title. Working title will be ”பாட்டி55” and the actual title will be “வடையை தாண்டி வருவாயா”.

Producer- தம்பி. Me no English. அடுத்த ஆள் வாங்க !
----

Bhagiyaraj- Sir, நம்ம பாட்டி கொஞ்கம் மாற்கமான பாட்டி. வடையில எப்பவும் முருங்ககீரைய தான் use பண்ணும். இத ஒரு நாள் திருடி சுட்டக் காக்கவுக்கு கசமுச…

Producer- நிறுத்து நிறுத்து.. நான் படமே எடுக்கல. பழயபடி நான் கிளி ஜோசியமே பார்க்க போறேன். 

***Above picture collage by the blogger.



No comments:

Post a Comment