Sunday, April 13, 2014

ஐ லவ் யு



ஐ என்றாலே “ஐ லவ் யு” என்று தான் நம்மக்களுக்கு தோன்றும். இந்த “ஐ லவ் யு” என்ற வார்த்தையை சினிமா தலைப்பில் எப்படி பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று பார்க்க ஒரு சிறு முயற்சி. அதன் பலனாக இந்த மாபெரும் பதிவு.

காதலுக்கு மரியாதை செய்து இப்பதிவை ஆரம்பிக்கிறேன்.

இந்த “ஐ லவ் யு” என்ற வார்த்தையை வைத்து எத்தனை படங்கள் வந்துள்ளது என்று பார்தால் வியப்பாக உள்ளது. உலக சினிமாவில் பல திரைப்படங்கள் இந்த வார்த்தையில் வந்துள்ளன. 

முதலில் இந்தியாவில் வந்த படங்களை பார்ப்போம்.

1979- சிரஞ்சீவி நடித்த தெலுங்குப் படம்.

1992- நம்ம ஊர் பிரசாந்த் நடித்த முதல் ஹிந்தி படம்.

2005- ஒரியா மொழியில் வந்த இப்படம் நம்ம இளைய தளபதி விஜய் நடித்த “துள்ளாத மனம் துள்ளும்” படத்தின் ரீமேக்.

2007- வங்காள படம். தெலுக்கில் தமிழில் வந்த “சம்திங் சம்திங்” ரீமேக்.

2012 – மற்றோரு வங்காள படம்

வேறு நாட்டுப் படங்கள்

1981 – பிரேசிலில் வந்த போர்துகிஸிய படம். போர்துகிஸ் பெயர் – Eu To Amo. சர்வதேச திரைப்பட விழவில் இதர்கு பெயர் “I Love You”

1986- பிரன்சில் வெளிவந்த ஃபிரென்சு படம்.

2002- சீனப் படம். மண்டிரியன் மொழியில் பெயர் – Wo Ai Ni. 

2005- குரேசியன் படம் – Volim Te

2007 – மோசம்பிக் நாட்டில் வந்த வசனமே இல்லாத படம்.

இதை தவிர,

PS, I Love You
I Love You, Phillip Morris
I Love You, Beth Cooper
I Love You, Man
I Love You, Anne
Mother, I Love You

Paris, I Love You (2006, France)

இரண்டு மணி நேரம் ஒடக்கூடிய இப்படத்தில் 18 குறும்படங்கள் உள்ளது. வெஸ் கேரவன் (Wes Carvan), அலெக்சாண்டர் பெயின் (Alexander Payne), கோயன் பிரதர்ஸ் (Coen Brothers), கஸ் வான் சேட் (Gus Wan Sant) போன்ற 22 இயக்குனர்களின் குறும்படங்கள் தொகுப்பாக வெளிவந்த படம்தான் பாரிஸ், ஐ லவ் யு.

இதை தொடர்ந்து நியூயார்க் ஐ லவ் யு, ரியோ ஐ லவ் யு போன்ற படங்கள் வெளிவந்தது. யாரவது சென்னை ஐ லவ் யு என்று எடுத்தால் நல்லா இருக்கும்.





No comments:

Post a Comment