Saturday, April 12, 2014

ஏக் துஜே கே லியே (1981, இந்தியா)


ஏ வரிசையில் என்ன படத்தை பற்றி எழுதலாம் என்று நினைக்கையில் வந்த முதல் படம் “ஏக் துஜே கே லியே”. ஆனால் வேற படத்தை பற்றி எழுதலாம் என்று நான் இப்படத்தை ஒரமாக வைத்தேன். என்னுடைய தேடலில் எதுவும் சரிபடவில்லை.

தென்னிந்தியாவைச் சார்ந்த தயாரிப்பாளர் எல். வி. பிரசாத் ஹிந்தி படங்களும் தயாரித்து வந்தார். தமிழில் வெளிவந்த “மன்மதலீலை” தெலுங்கில் ரிமேக் செய்து சுப்பர் ஹிட் அனது. இதை பார்த்த பிரசாத் கமலிடம் கால்சிட் (call sheet) கேட்க, கமலோ பாலசந்தரை கை காட்ட, பாலசந்தர் கமலை மனதில் வைத்து எழுதினர் “மரோ சரித்தர”. படம் அதிரி புதிரி ஹிட். இவர்கள் அடுத்த இலக்கு பாலிவுட் (Bollywood). ஹிந்தியிலும் படம் சுப்பர் ஹிட். வடா பாவ் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாய்கள் திறந்து வடாக்கள் கிழே விழுந்தது.

ஒரு படம் வெற்றி பெறுவது சிரமம் என்றால் அப்படம் காலம்காலமாக மக்கள் மத்தியில் நிலைத்துநிற்க உதவுவது அப்படத்தில் வரும் மறக்க முடியாத காட்சிகள். அப்படிப்பட்ட மறக்க முடியாத காட்சிகள் நிறைந்த படம் தான் இது.

சிலகாட்சிகள்

நாயகன் டும் டும் என்று துணியை துவைக்க பக்கத்து வீட்டில் இருந்து அவனின் டும் டும் சத்தத்திற்கு நாயகியின் பதில் வருகிறது. காட்சியின் முடிவில் துணி கிழிந்தது தான் மிச்சம்.



காதல் வயப்பட்ட நாயகனும் நாயகியும் தங்கள் அறையில் உள்ள விளக்கை அணைத்து அணைத்து சிக்னல் கொடுப்பது.



நாயகியிடம் உள்ள நாயகனின் புகைப்படத்தை அவளின் அம்மா எரித்து விடுகிறாள். அந்த எரித்த சாம்பலை எடுத்து காப்பியில் கலந்து குடித்து விடுகிறாள் நாயகி.



இப்படி பலக்காட்சிகள் சொல்லிக்கோண்டே போகலாம்.

மரோ சரித்தரவில் கமல்-சரிதா ஜோடி, ஆனால் ஹிந்தியில் எனோ சரிதாவை மாற்றி விட்டர் பாலசந்தர்.


2-டெக்கேட்ஸ் (Decades) முன்னாடி வந்த 2 ஸ்டேட்ஸ் (2 States) படம் இது. பார்க்கவில்லை என்றால் முதலில் பாருங்கள்.

இப்படத்தை பற்றி விரிவாக வேறு ஒரு பதிவில் சந்திப்போம்.


2 comments:

  1. 2-டெக்கேட்ஸ் (Decades) முன்னாடி வந்த 2 ஸ்டேட்ஸ் (2 States) படம் இது. பார்க்கவில்லை என்றால் முதலில் பாருங்கள்.

    I like this!! excellent choice of words.. :) both the movies, once in a lifetime performances!!

    ReplyDelete
  2. @Above, thanks for your words. Yes very good movie.

    ReplyDelete